Thursday, November 6, 2008

தீபாவளியும் 'ஹலவின்' னும் என் மகனும்

நன்றாக இருட்டிய பின் என் மகனும் அவனது நண்பர் குழாமும், சின்னன் சிறு குழந்தை கூட்டமாக ஒன்றிணைந்து அயலில் உள்ள வீடுகளுக்கு போய் இன்னிப்பு பண்டங்கள் வாங்க சென்றனர். ஒவ்வொருவரும் பேய்கள் போன்று உடையணிந்தும் சிலர் மண்டையோடுகள் போன்று உடையணிந்தும் இருந்தனர். அன்று 'ஹலவீன்' நாள். கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் நாள். நானும் எனது அப்பாவும், அவரின் தாத்தாவும் ஒரு போதும் கொண்டாடதஒரு நாள். எம் தமிழ் கலாசாரத்திலும் ஒரு போதும் வராத -நாள். மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தேன். துணைக்கு என் மனைவியும் சேர்ந்து போனார். மகனுக்கு உடை வாங்குவதற்காக பல கடைகளில் ஏறி இறங்கியது அவர் தான்.
சில நாட்கள் முன்பாக தான் தீபாவளி வந்து போனது. நாரகாசுரன் ஒரு தமிழன் என்றதனால் அவனை , ஒரு தமிழனை கொன்ற நாளை கொண்டாட்டமாக கொண்டாட மாட்டேன் என்று சொல்லி மகனுக்கும் எந்த ஒரு பண்டிகை கால உடையும் வாங்காது விட்டு இருந்தேன். அத்துடன் என் ஊரில் உள்ள எல்லோரும் சாவையும் பயங்கரங்களையும் எதிர் நோக்கி கொண்டு இருக்கும் போது நாம் மட்டும் எப்படி கொண்டாடுவது என்றும் ஒன்றுமே சொய்யவில்லை. கடந்த வருடமும் இப்படி தான் கடந்தது போனது. எனது அப்பாவும், தாத்தாவும், அவரின் முன்னோர்களும் கொண்டாடிய நாள் இந்த தீபாவளி. ஆனால் நான் கொண்டாடவில்லை

எமக்கு சம்பந்தமே இல்லாத ஹலவீனுக்கு மகனை தயார் பண்ணி வெளியே கொண்டாட அனுப்பிய பின் என் முகத்தை நிலைக் கண்ணாடியில் பார்க்கும் போது என்னால் என் முகத்தை நேர்மையாக பார்க்க முடியவில்லை.

4 comments:

Anonymous said...

Nallai irruku thau. this remind my shame. One of my Indian friend ask why u r not celebrate the Dewali. I sain in my country/my people are suffering so i dont do these. He said "well u can go(Stay in resorts) and enjoy you trips have fun.. When u do that dont u think about ur people". I have no answer to that. also i dont know am i doing the correct think -Siva

sukan said...

//எமக்கு சம்பந்தமே இல்லாத ஹலவீனுக்கு மகனை தயார் பண்ணி வெளியே கொண்டாட அனுப்பிய பின் என் முகத்தை நிலைக் கண்ணாடியில் பார்க்கும் போது என்னால் என் முகத்தை நேர்மையாக பார்க்க முடியவில்லை.//

ஒரு விதத்தில் தீபாவளியும் அப்படித்தானே, அது எமக்கு சம்மந்தம் இல்லை என்றும் நம்பும் படியாக கருத்துக்கள் உள்ளன. கொண்டாடிய பின்பு நேர்மையாக கண்ணாடியில் முகம் பார்க்க முடிவதில்லை.

நிறைய விசயங்களில் நாம் நட்டாற்றில் விடப்பட்டுள்ளோம். அடுத்த சந்ததிக்கு எம்மிடம் நேர்மையான இருப்பு எதுவும் இல்லை விட்டுச்செல்வதற்கு, எல்லாம் கலப்படம். இந்த உண்மையாவது அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். நேர்மையாக அதை எடுத்துச் சொல்வோம்.

Suresh Lakshmanan said...

good to see there are blogs written in tamil. keep goin!

Anonymous said...

நாங்களும் தீபாவளி கொண்டாடுவதில்லை..